காய்கறி வியாபாரி வீட்டில் 21 பவுன் தங்க நகைகள் திருட்டு
திருவண்ணாமலையில் காய்கறி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து, 21 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் காய்கறி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து, 21 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை, குமரக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மனைவி சரஸ்வதி (39). காய்கறி வியாபாரியான இவர், புதன்கிழமை (ஜூன் 11) வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். மறுநாளான வியாழக்கிழமை (ஜூன் 12) காலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 21 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.