தமிழ்நாடு

பி.இ. விண்ணப்பம்: கால அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான

தினமணி

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 2014-15 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (மே 19) மாலை 5.30 மணி வரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 940 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 20 கடைசி தேதியென அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க ஒரே நாள் மட்டுமே இருந்த நிலையில், பூர்த்தி செய்து  சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகத் தெரிகிறது.

மேலும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் தேதி மே 27-ஆம் தேதி வரை நீட்டித்து பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சான்றிதழின்றி விண்ணப்பிக்கலாம்: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளபோதும், சி.பி.எஸ்.இ. மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் நகல் இல்லாமலேயே பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் மாற்றம் இல்லை.

தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் சான்றிதழ் நகலை தனியாக சமர்ப்பிக்கலாம்.

மாநில கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த மதிப்பெண் சான்றிதழை இணைத்து விண்ணப்பித்துவிட்டு, கலந்தாய்வுக்கு வரும்போது அசல் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது  என தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT