முகப்பு
தமிழ்நாடு

திருநாரையூரில் ஜூன் 1 நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை: 5 ஆதீனங்கள் பங்கேற்பு

நம்பியாண்டார் நம்பிகள் சிதம்பரத்தை அடுத்த திருநாரையூரில் அவதரித்தவர். ஆதிசைவராகிய இவர் பொள்ளாப்பிள்ளையாரால் ஆட்கொள்ளப் பெற்றவர். இவர் படைத்த மோதக நிவேதானத்தை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:28 AM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருநாரையூர் ஸ்ரீபொல்லாப் பிள்ளையார் கோயிலில் நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை ஜூன் 1-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

நம்பியாண்டார் நம்பிகள் சிதம்பரத்தை அடுத்த திருநாரையூரில் அவதரித்தவர். ஆதிசைவராகிய இவர் பொள்ளாப்பிள்ளையாரால் ஆட்கொள்ளப் பெற்றவர். இவர் படைத்த மோதக நிவேதானத்தை பொள்ளாப்பிள்ளையார் ஏற்று அற்பதத்தை நிகழ்ச்சியவர். பொள்ளாப்பிள்ளையார்  திருவருளினால் நடராஜர் கோயிலில் மறைந்திருந்த தேவாரத் திருமுறைகளை சோழன் அபயகுல சேகரன், நம்பியாண்டார் நம்பிகள் துணையுடன் வெளிக் கொண்டு வந்து செப்பேடுகளில் பொறுத்து வைத்தான் என வரலாறு கூறுகிறது.

இச்சிறப்பு வாய்ந்த ஸ்ரீநம்பியாண்டார் நம்பிகள், அவர் அவதரித்த திருநாரையூர் ஸ்ரீபொல்லாப் பிள்ளையார் கோயிலில் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்தின் கிருஷ்ணகிரி பெ.கு.வரதராஜன் அறக்கட்டளை சார்பில் நடைபெறுகிறது. குருபூஜை முன்னிட்டு சிவபூஜை, கணபதி ஹோமம், திருமுறை இன்னிசை, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.

விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் ஆர்.கே.கணபதி தலைமை வகிக்கிறார். மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்னிலை வகிக்கிறார். கு.சேதுசுப்பிரமணியன் வரவேற்கிறார். திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மட அதிபர் ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி தம்பிரான், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீஅம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமை ஆதீனம் ஸ்ரீசண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆசியுரையாற்றுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.