ஜூன் 2-ல் சிதம்பரத்தில் சேக்கிழார் குருபூஜை விழா மற்றும் அறக்கட்டளை வெள்ளி விழா
சிதம்பரத்தில் சேக்கிழார் குருபூஜை விழா மற்றும் கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை வெள்ளிவிழா ஞானப்பிரகாசர் வடக்குத்தெருவில் உள்ள சேக்கிழார் மணி மண்டபத்தில் ஜூன்
சிதம்பரத்தில் சேக்கிழார் குருபூஜை விழா மற்றும் கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை வெள்ளிவிழா ஞானப்பிரகாசர் வடக்குத்தெருவில் உள்ள சேக்கிழார் மணி மண்டபத்தில் ஜூன் 02ம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது.
சேக்கிழார் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவனடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் சேக்கிழார்.
சேக்கிழார் மீது அளவற்ற பக்தி கொண்ட தற்போது நியூயார்க்கில் வசிக்கும் ஜெயகாந்தம் துரைகண்ணு தம்பதியினர், 1989-ல் சேக்கிழார் அறக்கட்டளையை தொடங்கினர். 1999-ல் சிதம்பரம் ஞானப்பிரகாசர் வடக்குத்தெருவில் சேக்கிழார் மணி மண்டபத்தை கட்டி கொடுத்தனர். அந்த மணி மண்டபத்தில் மேல்தளத்தில் சேக்கிழார் சம்பந்தமாக வெளிவந்துள்ள நூல்களை அனைத்து சேமித்து வைக்க நூலகமும், சுவர்களில் திருத்தொண்டர் வரலாறுகளை புடைப்புச் சிற்பங்களாகவும் அமைத்துள்ளார். அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன், உறுப்பினர் டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்புடன் சேக்கிழார் அறக்கட்டளையையும், மணி மண்டபத்தையும் சிறப்புற நிர்வகித்து வருகினறனர்.
இச்சிறப்பு வாந்த சேக்கிழார் குருபூஜையும், கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை வெள்ளிவிழா ஜூன் 2-ம் தேதி சேக்கிழார் மணி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சேக்கிழார் திருவுருவச்சிலை வீதி உலா, சிறப்பு வழிபாடு, சொற்பொழிவுகள், உரையரங்கம், மகளிர் அரங்கம், வெள்ளி விழா மலர் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பங்கேற்று சேக்கிழார் விருதினை வழங்கி ஆதியுரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன், உறுப்பினர் டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.