ஆவின் சமன்படுத்திய பால் (ப்ளூ நைஸ்), "ஸ்டாண்டர்டைஸ்டு மில்க்' (க்ரீன் மேஜிக்), முழு கொழுப்புப் பால் (புல் கிரீம்), "டயட் மில்க்' (மெஜந்தா) ஆகியவற்றின் விலை வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்படுகிறது.
மாதத்துக்குக் கூடுதல் ரூ.300: இப்போது அட்டை மூலம் ஒரு லிட்டர் ஆவின் பால் வாங்குவோர், தற்போது செலுத்தி வரும் தொகையைக் காட்டிலும் நவம்பர் மாதம் முதல் ஒரு லிட்டருக்கு கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும், அட்டை மூலம் ஆவின் பால் வாங்குவோர், விலை உயர்வு காரணமாக நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை அட்டை புதுப்பித்தலின்போது கூடுதலாக ரூ.150 செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, நவம்பர் 1 முதல் நவம்பர் 15 வரை உள்ள 15 நாள்களுக்கு விலை உயர்வு வித்தியாசத் தொகையை புதுப்பித்தலின்போது செலுத்த வேண்டும் என்று ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். விலை உயர்வு (நவம்பர் 1) அறிவிப்பின்படி, ஆவின் பால் (அட்டை விலை), சில்லறை விலை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன (இப்போதுள்ள விலை அடைப்புக்குறிக்குள்):
ஆவின் பால் வகை பால் அட்டை (மாதத்துக்கு) சில்லறை விலை
சமன்படுத்திய பால்
("டோன்ட் மில்க்')- "ப்ளூ நைஸ்'
3 சதவீத கொழுப்புச் சத்து ரூ.34
(ரூ.24) ரூ.37
(ரூ.27)
"ஸ்டாண்டர்டைஸ்டு மில்க்'
("க்ரீன் மேஜிக்') பச்சை நிற பாக்கெட்
4.5 சதவீத கொழுப்புச் சத்து ரூ.39
(ரூ.29) ரூ.41
(ரூ.31)
"ஃபுல் கிரீம்' (முழு கொழுப்புப் பால்)
ஆரஞ்சு பாக்கெட்
6 சதவீத கொழுப்புச் சத்து ரூ.43
(ரூ.33) ரூ.45
(ரூ.35)
"மெஜந்தா' ("டயட் மில்க்')
1.5 சதவீத கொழுப்புச் சத்து ரூ.33
(ரூ.23) ரூ.34
(ரூ.24)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.