பழனி-நெல்லுக்குழி புனிதயாத்திரை - ஏப்ரல்.10 துவக்கம்
பழனி முதல் நெல்லுக்குழி வரையிலான இரு மாநிலங்கள் இணைந்து நடத்தும் புனிதயாத்திரை வரும் ஏப்ரல்.10ம் தேதி பழனி சவளக்காரர் மடத்தில் துவங்குகிறது.
பழனி முதல் நெல்லுக்குழி வரையிலான இரு மாநிலங்கள் இணைந்து நடத்தும் புனிதயாத்திரை வரும் ஏப்ரல்.10ம் தேதி பழனி சவளக்காரர் மடத்தில் துவங்குகிறது.
சமூகத்தில் நிலவும் ஊழல், மதக்கலவரம், போதை ஆதிக்கம், தீவிரவாதம் இவற்றை தடுக்கும் விதமாக இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேரள மாநிலம் நெல்லிக்குழி(கொச்சி)யை தலைமையிடமாக கொண்ட ஸ்ரீராமவிலாசம் சவளர் சொசைட்டியின் மாநில கமிட்டி சார்பில் தமிழ்நாடு, கேரளா என இரு மாநிலங்கள் இணைந்து நடத்தும் புனித யாத்திரை பழனி அடிவாரம் சவளக்காரர் மடத்தில் வரும் ஏப்.10ம் தேதி துவங்குகிறது. விழாவை முன்னிட்டு ஏப்.9ம் தேதி சவளக்காரர் மடத்தில் கலாச்சார கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஏப்ரல்.10ம் தேதி துவங்கும் ஊர்வலத்தை புனித யாத்திரைக்குழு தலைவர் பீதாம்பரன், பொதுச்செயலாளர் அசோகன், கேரள மாநிலம் தமிழாசிரியர் முத்துக்குமார், பெங்களூரு சக்தி மிஷன் நிறுவனர் பரமபூஜ நியரிஷி தேவ் நேத்ராஜி, கோவை ஆடிட்டர் முத்துச்சாமி உள்ளிட்டோர் துவக்கி வைக்கின்றனர். பழனி நகர்மன்ற தலைவர் வேலுமணி சிறப்புரை நிகழ்த்துகிறார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி நெல்லிக்குழியில் நடைபெறுகிறது.
அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், முன்னாள் எம்பி., பன்னியன் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர்.