தனியார் வங்கியில் 500 ரூபாய் கள்ளநோட்டுக்கள்: எஸ்.பியிடம் மேலாளர் புகார்
தனியார் வங்கியில் நிறுவனக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையில் ரூ.500 கள்ளநோட்டுகள் எண்ணம் 5 இருந்தது கண்டறியப்பட்டது தொடர்பாக
தனியார் வங்கியில் நிறுவனக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையில் ரூ.500 கள்ளநோட்டுகள் எண்ணம் 5 இருந்தது கண்டறியப்பட்டது தொடர்பாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி மகேஸ்வரனிடம் செவ்வாய்கிழமை மேலாளர் புகார் செய்தார்.
மதுரை தனியார் வங்கி மண்டல அலுவலகத்தில் கரன்சி சரிபார்ப்பு பிரிவில் மேலாளராக இருந்து வருபவர் என்.ஏ.பிரகாஷ். இவர் ஒவ்வொரு வங்கியிலிருந்தும் வந்த கரன்சி கட்டுகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது, கடந்த 24.7.2015 அன்று ராஜபாளையம் வங்கி(ஐ.சி.ஐ.சி.ஐ) கிளையில் லிங்கம் மார்க்கெட்டிங் நிறுவன கணக்கில் செலுத்தப்பட்ட தொகையில் 5 எண்ணம் கொண்ட ரூ.500 கள்ளநோட்டுகள் ரூ.2500 இருந்தது கண்டறியப்பட்டது.
Advertisement
இது தொடர்பாக உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வங்கி மேலாளர் பிரகாஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.