விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை துறையினரின் பணிகள் ஆட்சியர் ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை துறையினருடன் பொதுமக்கள் இணைந்து முனைப்புடன் பார்த்தீனியச் செடிகளை அழிக்க ஒருங்கிணைந்த களை நிர்வாகத்தை கடைபிடித்து அழிக்க ஆட்சியர் வே.ராஜாரமன் அறிவுரை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை துறையினருடன் பொதுமக்கள் இணைந்து முனைப்புடன் பார்த்தீனியச் செடிகளை அழிக்க ஒருங்கிணைந்த களை நிர்வாகத்தை கடைபிடித்து அழிக்க ஆட்சியர் வே.ராஜாரமன் அறிவுரை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில், விளைநிலங்கள், தோட்டங்கள், பயிரிடப்படாத நிலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பார்த்தீனியச் செடிகள் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், ஆடு, மாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையுள்ளது. இதை வேரோடு அகற்றுவதற்கு வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செடிகளை அகற்றும் போது தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதவாறு கைகளில் துணிகள் அல்லது கையுறைகள் அணிந்து அகற்ற வேண்டும் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து தெற்கு வெங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள விளைநிலங்களையும், பார்த்தீனியச் செடிகளை அகற்றும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, விளைநிலங்களில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். அதில் உளுந்தில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த குளோபிரிட் 5 மில்லி அளவில் விதையில் போட்டு நேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும். அதேபோல், இதே மருந்தை வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதற்கு 100 மில்லி முதல் 125 மில்லி வரையில் தெளிக்க வேண்டும். அதேபோல், வயல் வரப்புகளில் களைகள் பரவாமல் தடுக்க களைக் கொல்லி தெளிக்கவும் விவசாயிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
Advertisement