அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்கத்தின் கட்டட வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு தலைவர் அங்கம்மாள் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் டி.டெய்சி, மாவட்ட செயலாளர் மோகனவல்லித்தாயார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை முழு நேரம் அரசு ஊழியராக்க வேண்டும். சட்டபூர்வமான ஓய்வூதியம், சிறு அங்கன்வாடி ஊழியர்களை பொது மையங்களில் பணியமர்த்தவும், இந்த மையங்களை தனியார் மையமாக்கும் போக்கினை கைவிட வேண்டும்.
Advertisement
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்.2-ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் உணவு வழங்கிய பின் போராட்டத்தில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.