முகப்பு
தமிழ்நாடு

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:34 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பசலிக்கா அந்தஸ்து பெற்றது. உலகப் புகழ்ப் பெற்ற இந்தப் பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான ஆண்டுப் பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, திருக்கொடியேற்றம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கொடியேற்றத்தின், முதல் நிகழ்ச்சியாக திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது.

22 அடி நீளமும், 14 அடி உயரமும் கொண்ட புனிதக் கொடி, பேராலய கிழக்குப் பகுதியிலிருந்து பாரம்பரியான பாதைகளில் ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டு  பேராலயத்தை வந்தடைந்தது.

பின்னர், தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், கொடியைப் புனிதம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இரவு பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆவே மரியே மரியே வாழ்க என பக்தி முழக்கம் எழுப்பி வழிபாடு மேற்கொண்டனர்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, வேளாங்கண்ணி பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மின் விளக்கு அலங்காரங்கள் ஒளிரச் செய்யப்பட்டன. மின்னொளியில் மிளிரிய பேராலயத்தின் நடுவே, 60 அடி உயர கொடிக்கம்பத்தில் 22 அடி நீளம் கொண்ட புனிதக் கொடி காற்றில் அசைந்தாடியது பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் திரளான அளவில் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வேளாங்கண்ணியின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்புப் படையினர் கடற்கரை மற்றும் சில பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →