தமிழ்நாடு

விருதுநகர் அருகே மாசானி அம்மன் கோயில் திருவிழா

விருதுநகர் அருகே ஆதிசக்தி அன்னை மாசனி அம்மன் தியான பீட திருவிழாவில் பகதர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றுச் சென்றனர்.இக்கோயில் வளாகத்தில் மாசித் திருவிழா கடந்த

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஆதிசக்தி அன்னை மாசனி அம்மன் தியான பீட திருவிழாவில் பகதர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றுச் சென்றனர்.இக்கோயில் வளாகத்தில் மாசித் திருவிழா கடந்த வியாழக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவில் பக்கத்து கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிபாடு செய்து தரிசனமும் பெற்றுச் சென்றனர்.

இத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பொதுமக்கள் மூலம் பெற்ற மண் காணிக்கையை கொண்டு உருவாக்கப்பட்ட மாசானி அம்மனுக்கு மயான பூஜை நடத்தப்பட்டது. இப்பூஜைக்கு பின் கோடை மழை பெய்து இச்சிலை கரையும் போது பக்தர்களின் பிரச்னையும் கரையும் என்பது ஐதீகம் ஆகும். இவ்விழாவை முன்னிட்டு திருக்கோயில் தியான பீட வளாகத்தில் 3 நேரமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அன்னை மாசானி அம்மன் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் இளங்கோ, இளம்செழியன் மற்றும் ரெங்கராஜா ஆகியோர் செய்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT