தமிழ்நாடு

திமுகவினர் 2016 தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டத்தில் 2016 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தயாராக வேண்டும் என தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் 2016 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தயாராக வேண்டும் என தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டத்தின் தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் தனியார் அரங்கத்தில் செவ்வாய்கிழமை மாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வமணி, வடக்கு மாவட்ட அவைத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், தெற்கு மாவட்ட செயலாளர், வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம்தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், தி.மு.க  தொண்டர்கள் 2016 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள   தயாராக வேண்டும். அதற்கு முன்னதாக மார்ச்-1ம் தேதி தளபதி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் நகரம், ஒன்றியம், கிளைக்கழகம் சார்பில் போர்டுகள் வைத்து தெருமுனைப்பிராசாரம் அல்லது சிறு அளவில் கூட்டம் நடத்த வேண்டும்.அதேபோல், அன்றைய நாளில் இருந்து தேர்தல் பணிகளும் தொடங்க இருக்கிறது. மேலும், நகரம், ஒன்றியம் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் உண்மையான விசுவாசியை முகவராக நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், வருகிற தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம்தென்னரசு பேசுகையில், விருதுநகர் மாவட்டம், நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. உங்களோடு பணியாற்றவே இப்பொறுப்பேற்றுளேன். மார்ச்-1ம் தேதி தளபதி ஸ்டாலின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய நாளில் கிராமங்களில் கொடியேற்றுதல், நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்டவைகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். எனவே பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எல்லாரையும் சமமாக கட்சி நடத்தும். அதனால், கால்கள் இரண்டு ஆனாலும் பாதையும், பயணமும் ஒன்றுதான். எனவே நமது இலக்கு வர இருக்கிற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் சொத்துப்பாதுகாப்பு குழு உறுப்பினர் குன்னூர் சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், விஜயகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT