தமிழ்நாடு

வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கும் அறிவிப்பை திரும்ப பெற பாஜக வலியுறுத்தல்

வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு இருந்தால் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற மாநகராட்சியின் அறிவிப்பை திரும்ப

ஆர். ஆதித்தன்

வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு இருந்தால் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற மாநகராட்சியின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, பாஜக சேலம் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.பி.கோபிநாத் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாநகராட்சி மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் தொட்டி, டிரம்களில் கொசுப்புழு இருந்தால் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாக்கடை கழிவுகள் தேங்கி நிற்பதும், அதில் கொசுக்கள் உற்பத்தியாவது இன்றுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக குழிகள் வெட்டப்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.

மேலும் நகரில் சில இடங்களில் குழாய்களில் நீர் கசிவு ஏற்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது. மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் உள்ளது.

இதுபோல குறைபாடுகளை வைத்திருக்கும் மாநகராட்சி நிர்வாகம், வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு இருப்பது கண்டுபிடித்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. எனவே, மாநகராட்சி ஆணையாளர் தனது அறிக்கையை திரும்ப பெற வேண்டும்.

மேலும் கொசுப்புழு அகற்றுவதற்கு தக்க அறிவுரைகளை மக்களுக்கு வழங்க வேண்டும். அத்துடன் வாரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் உள்ள கொசு புழுக்களை  அழிப்பதற்கான மருந்தை அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்க வேண்டும்.

வீதி தோறும் தினமும் கொசுக்களை கட்டுப்படுத்த புகை அடிக்க வேண்டும். இத்துடன் சிறப்புக் கண்காணிப்பு குழு அமைத்து சுகாதார வசதி தேவைப்படும் பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்தக் குழுவை தொடர்பு கொண்டு  பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிóததுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT