தமிழ்நாடு

சுற்றுச்சுழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் இரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜபலின் ஜான்

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் இரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 8 மணிக்கு ஈரோடு பேருந்து நிலையம் அருகே அரசு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து திண்டல், பெருந்துரை ஆகிய இடங்களில் அரசு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பவானி அருகே உள்ள ஆப்பக்கூடலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றுக் கொண்டிருந்தார். செல்லும் வழியில் உடல்நிலை சற்று மோசமானதால் அவருடைய உதவியாளரிடம் தெரிவித்தார். அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமானதால் உடல் வேர்த்து படபடப்பு ஏற்பட்டது.

பின்னர் உதவியாளர்கள் விரைந்து ஆப்பக்கூடலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸில் மருத்துவர் உதவியோடு ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேரத்திற்கு பின்னர் உடல்நிலை சற்று தேறியதும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.வி ராமலிங்கம், ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், எம்.பி செல்வகுமார சின்னய்யன் உள்பட 100-க்கும் மேற்பட்ட அ.தி.முக.,வினர் மருத்துவமனையில் குவிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

SCROLL FOR NEXT