தமிழ்நாடு

ஆழ்வார்குறிச்சி அருகே பொத்தையில் மீண்டும் தீ: விடிய விடிய தீயணைப்பில் ஈடுபட்ட வனத்துறையினர்

ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் சாலையில் உள்ள முள்ளிமலை பொத்தையில் திங்கள்கிழமை நள்ளிரவு தீப் பிடித்தது. வனத்துறையினர் தீயை விடிய விடிய போராடி அணைத்தனர்.

கு. அழகிய நம்பி

ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் சாலையில் உள்ள முள்ளிமலை பொத்தையில் திங்கள்கிழமை நள்ளிரவு தீப் பிடித்தது. வனத்துறையினர் தீயை விடிய விடிய போராடி அணைத்தனர்.

முள்ளிமலைப் பொத்தையின் வடபுறத்தில் கடந்த ஜூலை 10 வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் தீப் பிடித்தது. அதை உடனடியாக வனத்துறையினர் வந்து அணைத்தனர். இந்நிலையில் பொத்தையின் தென்புறத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தீப் பிடித்ததாம்.

இது குறித்தத் தகவல் அறிந்ததும் கடையம் வனச்சரகர் இளங்கோ உத்தரவில், வனவர் சக்தி கதிர்காமர் அறிவுரையில் வனக்காப்பாளர் பூல்பாணிடியன், வன பாதுகாவலர்கள் செல்லத்துரை, ராமச்சந்திரன் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து விடியவிடிய தீயை அணைத்தனர். முள்ளிமலைப் பொத்தையில் அரிய வகை புல், மற்றும் சிறு மரங்கள், மூலிகைச் செடிகள் நிறைந்துள்ளன.

மேலும் இங்கு காட்டுப்பன்றி, புள்ளிமான், கடமான், மிளா போன்ற மிருகங்களும் பெருகி உள்ளன. பொத்தையின் மேல்பகுதியில் தீப் பிடித்ததால் மிருகங்கள் பொத்தையின் அடிப்பகுதியில் உள்ள அடர்ந்த புதர்ப் பகுதிக்குச் சென்று தப்பின. மேலும் தீக்குக் காரணம் குறித்து வனச்சரகர் இளங்கோ தலைமையில் வன அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

SCROLL FOR NEXT