முகப்பு
தமிழ்நாடு

கருவூல கொள்ளையன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் துணைக் கருவூலத்தில் புகுந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள்,

தமிழ்நாடு

கருவூல கொள்ளையன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் துணைக் கருவூலத்தில் புகுந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள்,

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:59 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் துணைக் கருவூலத்தில் புகுந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள், பணம், பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முருகேசன் (52) என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் புதன்கிழமை உத்தரவிட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் துணைக் கருவூலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளை நடைபெற்றது. இதனை காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அ.சி.வெள்ளையன், கே.முரளிதரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 6 பேரைக் கைது செய்தனர்.

விசாரணையில் முக்கிய குற்றவாளியான மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, வி.வெங்கடாசலபுரம், சுப்பு (எ) சண்டியர் சுப்பு மகன் முருகேசன் (52), ஸ்ரீவில்லிபுத்தூர் கருவூலக் கொள்ளை உட்பட சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர், மல்லி, அரக்கோணம், சேடபட்டி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் இவரது தொடர் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பரிந்துரையின் பேரில், குற்றவாளி முருகேசன் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →