முகப்பு
தமிழ்நாடு

மணல் திருடி வந்த டிராக்டரில் சிக்கி ஓட்டுநர் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் திருடி வந்த டிராக்டரில் சிக்கி அதை ஓட்டி வந்த இளைஞர் உயிரிழந்தார்.

தமிழ்நாடு

மணல் திருடி வந்த டிராக்டரில் சிக்கி ஓட்டுநர் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் திருடி வந்த டிராக்டரில் சிக்கி அதை ஓட்டி வந்த இளைஞர் உயிரிழந்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:00 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் திருடி வந்த டிராக்டரில் சிக்கி அதை ஓட்டி வந்த இளைஞர் உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மொட்டப்பத்தான் கண்மாயில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டு டிராக்டர் அதிவேகமாக, அசோக்நகர் வழியே வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தது.

டிராக்டரை ரைட்டன்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் முத்தையா (25) என்பவர் ஓட்டி வந்துள்ளார். பின்னால் மணல் மேல் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜாசிங், ரைட்டன்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் ரமேஷ் (26) ஆகியோர் உட்கார்ந்து வந்துள்ளார்கள்.

அப்போது சாலையில் இருந்த ஒரு பள்ளத்தில் அதிவேகமாக வண்டி விழுந்துள்ளது. அப்போது டிராக்டரில் இருந்து கீழே விழுந்த முத்தையா மீது டிராக்டர் ஏறியுள்ளது. இவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரும் வழியில் உயிரிந்தார். மேலும் பின்னால் உட்கார்ந்து வந்த ரமேஷ் பலத்த காயம் அடைந்தார்.

இது குறித்து சிங்கம்மாள்புரம் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ராஜாசிங் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →