வீடு கட்ட மாட்டு வண்டியில் மணல் அடிக்க மறுத்தவர் குத்திக் கொலை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு கட்டுவதற்கு மாட்டு வண்டியில் மணல் அடிக்க
தமிழ்நாடுவீடு கட்ட மாட்டு வண்டியில் மணல் அடிக்க மறுத்தவர் குத்திக் கொலை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு கட்டுவதற்கு மாட்டு வண்டியில் மணல் அடிக்க
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு கட்டுவதற்கு மாட்டு வண்டியில் மணல் அடிக்க மறுத்தவரைக் குத்திக் கொலை செய்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மாத்தூர், ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் கணேசன் (48). இவர் மாட்டு வண்டி வைத்து மணல் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இதே இடத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் அன்புராஜ். இருவரும் உறவினர்கள். அன்புராஜ் வீடு கட்டி வருகி்றார். இதற்காக மணல் அடிக்க கணேசனை அணுகியுள்ளார். ஆனால் அவர் மணல் அடிக்க மறுத்திவிட்டாராம். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு அன்புராஜ், கணேசனை கத்தியால் குத்தியுள்ளார். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட கணேசன், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அன்புராஜை தேடி வருகிறார்கள,.