2-ம் வகுப்பு மாணவியை வன் புணர்ச்சி செய்த வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2-ம் வகுப்பு மாணவியை வன் புணர்ச்சி செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.37 ஆயிரம் அபராதம் விதித்தும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிழா நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாடு2-ம் வகுப்பு மாணவியை வன் புணர்ச்சி செய்த வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2-ம் வகுப்பு மாணவியை வன் புணர்ச்சி செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.37 ஆயிரம் அபராதம் விதித்தும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிழா நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2-ம் வகுப்பு மாணவியை வன் புணர்ச்சி செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.37 ஆயிரம் அபராதம் விதித்தும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிழா நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், பரமசிவம் நாடார் தெருவைத் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி (30)-மாரியம்மாள் தம்பதியினர். ராமமூர்த்தி ராஜபாளையத்தில் உள்ள ஒரு தரி மில்லில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உண்டு. இவர்களின் ஒரு மகள் இங்குள்ள சிவந்திபட்டி நாடார் தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கிராமத்தில் பங்குனி பொங்கல் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், பள்ளிக்கு விடுமுறை விட்டிருந்துள்ளார்கள்.
இதனால் மாணவி தனது பாட்டி வீட்டிற்கு பக்கத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்கு 8.4.2008-ம் தேதி மாலை சாமி கும்பிடச் சென்று கொண்டிருந்துள்ளார். சண்முகசுந்தரம் நாடார் தெரு வழியே சென்று கொண்டிருந்தபோது, நந்தவனநாடார் மகன் பாதமுத்து (28) தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். சிறுமியை வீட்டினுள் சாவி இருக்கிறது.
எடுத்துவா என்று கூறியுள்ளார். சிறுமி உள்ளே சென்றதும், பாதமுத்துவும் வீட்டினுள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டாராம். சிறுமியின் காலில் கிடந்த கொலுசை கழற்றி வைத்துக் கொண்டு மிரட்டி, சிறுமியை வன் புணர்ச்சி செய்துள்ளார்.
இதில் சிறுமிக்கு பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. வெகு நேரமாகியும் சிறுமியை காணாத பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளார்கள். மறுநாள் காலை பாதமுத்து வீட்டில் சிறுமி இருப்பது அறிந்து பெற்றோர் சென்றுள்ளார்கள். அங்கிருந்த பாதமுத்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் குழந்தை சார்பில் அவரது தந்தை புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாதமுத்துவைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகிழா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்குரைஞர் எம்.ஜெகதீசன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.ராஜலட்சுமி பாதமுத்துவிற்கு, சிறுமியை கற்பழித்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்ட குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்கு ஒராண்டு சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலுசு திருடிய குற்றத்திற்கு 3 வருட சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரமும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்புக் கூறினார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
திருமணம் முடிந்து இரு குழந்தைகள் உள்ள பாதமுத்து மீது மம்சாபுரம் காவல் நிலையத்தில் 8.1.2006-ம் தேதி 9 வயது குழந்தையை வன் புணர்ச்சி செய்த வழக்கு இதே நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனுடைய தீர்ப்பும் இம் மாதத்தில் வழங்கபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.