நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு: 15,027 பேர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர்(டிஎன்பிஎஸ்சி) தொகுதி2 தேர்வை 15,027 பேர் எழுதினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி2 பணிகளுக்கான தேர்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 19,322 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதற்காக நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு ஆகிய வட்டங்களில் 45 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, கிரீன்பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோட்டாட்சியர் எம்.கண்ணன், வட்டாட்சியர் கதிரேசன், பள்ளி தலைமையாசிரியர் அல்லிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Advertisement