தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் செவ்வாய்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் செவ்வாய்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இம்மாவட்டத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்றும் 75 சதவீதம் மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயனடைந்த விவசாயிகளின்  விளைநிலங்களில் சொட்டுநீர்ப்பாசனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் நேரில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். இதில், மேலச்சின்னையாபுரம், கீழதிருத்தங்கல், ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கொய்யா, நிலசம்பங்கி மற்றும் கறிவேப்பிலை பயிர் செய்துள்ள விவசாயிகளிடம் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்த பின் நீர்பாய்ச்சும் முறை எளிதாக உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், நிலத்தில் சொட்டு நீர்ப்பாசன குழாய்களை சேதப்படுத்தாமல் பயன்படுத்துவது தொடர்பாகவும், பாதுகாப்பாது குறித்தும் விளக்கமாக விவசாயிகளிடம் அவர் எடுத்துரைத்தார்.

அப்போது உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(செல்வம்), தோட்டக்கலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், தோட்டக் கலை உதவி இயக்குநர் சமுத்திர பாண்டியன் ஆகியோர் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT