முகப்பு
தமிழ்நாடு

மாணவர்களும், மக்களும் போற்றும் நல்லாசிரியர்களாக பணிபுரிய வேண்டும்: துணை வேந்தர்

ஆசிரியர்கள் மாணவர்களும், மக்களும் போற்றும் நல்லாசிரியர்களாக பணிபுரிய வேண்டும் என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.விஸ்வநாதன் கூறினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

ஆசிரியர்கள் மாணவர்களும், மக்களும் போற்றும் நல்லாசிரியர்களாக பணிபுரிய வேண்டும் என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.விஸ்வநாதன் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி, ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் 8-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில் அவர் மேலும் கூறியதாவது:

உலகில் அதிக இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா. 65 சதவீதம் பேர் நம் நாட்டில் இளைஞர்கள். இவர்களை நல்வழியில் நடத்தி, ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு ஆசிரிர்களிடம் உள்ளது. இளைஞர்களை அதிவிரைவில் தீய வழியில் இழுத்துச் செல்ல பல்வேறு ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டுள்ளன. இதற்கு இளைஞர்கள் இரையாகக் கூடாது.

உழைப்பன் தானும் உயர்ந்து, நாட்டின் உயர்வுக்கும் காரணமாக உள்ளான். நாளைய பாரதத்தை உருவாக்க புறப்பட்டுச் செல்லும் கல்வியியல் பட்டம் முடித்த நீங்கள், மாணவர்களும் மக்களும் போற்றும் நல்லாசிரியர்களாக பணிபுரிய வேண்டும் என்றார் அவர்.

விழாவிற்கு கல்லூரிச் செயலாளர் திலீபன்ராஜா தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அதிகாரி புலவர் செ.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார். விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →