சென்னை புது வண்ணார்பேட்டையில் 10 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள குடோனில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
எலக்ட்ரானிக் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், பேட்டரிகள், பொம்மைகள் மற்றும் எல்.இ.டி. பல்புகள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
அந்த குடோனில் நேற்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்கள் எரிந்ததால், 12 தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 12 மணி நேரம் போராட்டம் நடத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குடோனுக்கு செல்லுவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே இருந்ததால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக மாவட்ட (வட சென்னை) தீயணைப்பு நஅலுவலர் கே. குமார் கூறினார்.
இந்த தீ விபத்தில் யாரும் காயமேற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.