சென்னை பொறியாளருக்கு டி.ஆர்.டி.ஏ. விருது
சென்னை அருகேயுள்ள ஆவடியில் இயங்கி வரும் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பொறியாளருக்கு 2013 ஆம் ஆண்டுக்கான டி.ஆர்.டி.ஏ. விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அருகேயுள்ள ஆவடியில் இயங்கி வரும் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பொறியாளருக்கு 2013 ஆம் ஆண்டுக்கான டி.ஆர்.டி.ஏ. விருது வழங்கப்பட்டுள்ளது.
அர்ஜூன் ராணுவ டாங்கிக்கான மேம்படுத்தப்பட்ட வடிவைப்பு மற்றும் இயந்திய அமைப்பு குறுகிய காலத்தில் வடிவமைத்ததற்காக இந்த விருதை பொறியாளர் வி. பாலகுருவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாலகுரு தற்போது ஆவடியில் உள்ள வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வாகனங்களை சோதனை செய்யும் குழுவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
Advertisement
ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பாலகுருவுக்கு மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் இந்த விருதை வழங்கினார்.