விளையாட்டு வீரர்களை அரசு தத்தெடுக்க வேண்டும்: பொன்ராஜ்
தேசிய மற்றும் மாநில விளையாட்டு வீரர்களை முழுவதும் மத்திய, மாநில அரசுகள் தத்தெடுத்து அவர்களை சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார் செய்ய வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர்
தமிழ்நாடுவிளையாட்டு வீரர்களை அரசு தத்தெடுக்க வேண்டும்: பொன்ராஜ்
தேசிய மற்றும் மாநில விளையாட்டு வீரர்களை முழுவதும் மத்திய, மாநில அரசுகள் தத்தெடுத்து அவர்களை சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார் செய்ய வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர்
தேசிய மற்றும் மாநில விளையாட்டு வீரர்களை முழுவதும் மத்திய, மாநில அரசுகள் தத்தெடுத்து அவர்களை சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார் செய்ய வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் கூறினார்.
தமிழ்நாடு மாநில கைப்பந்துக் கழகம் சார்பில் கல்லூரிகளுக்கிடையிலான முதலாவது மாநில மெகா கைப்பந்துப் போட்டிகள் தொடக்க விழா, விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் விளையாட்டு வீரர் வீராங்கணைகள் பங்கேற்ற பிரமாண்டமான அணிவகுப்பு மரியாதையை குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் ஏற்றுக் கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில அளவிலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கிடையிலான முதலாவது மெகா வாலிபால் போட்டி இது போன்ற ஒரு கிராமத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெறுவது பெருமைக்குரிய விஷயம். மாநில மற்றும் தேசிய விளையாட்டு வீரர்களை மத்திய மாநில அரசுகள் முழுவதுமாய் தத்து எடுத்துக் கொண்டு அவர்களுக்கு குடும்ப கவலைகள் மற்றும் படிப்பு கவலைகளே இல்லாத நிலையை உருவாக்கி சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார் செய்ய வேண்டும் என்றார் அவர்.