நாகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற மாணவ, மாணவிகள் சேர்க்கை
திருச்சுழி கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருவதாக இணைப்பதிவாளர் ஜி.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருச்சுழி கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருவதாக இணைப்பதிவாளர் ஜி.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம். அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலையில் சாலியர் தொழிலாளர் நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் திருச்சுழி கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெற்று வருகறது.
இப்பயிற்சி வகுப்புகள் வார இறுதிநாள்களில் (சனி, ஞாயிறு) நடத்தப்படுகிறது. இதில், உலோகவியல், அதன் பயன்பாடு, தங்கம் பற்றிய விவரம் மற்றும் மதிப்பிடும் முறை, நகைகளின் வகை கண்டறிதல், வங்கியில் கடன் வழங்கும் முறை, ஹால் மார்க், அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம், விதிமுறைகள் போன்ற 40 மணிநேர வகுப்பறை பயிற்சியும், 30 மணிநேரம் நகை செய்முறை பயிற்சியும், உரைகல் முறையில் தங்கத்தின் தரம் கண்டறிதல் செய்முறைப்பயிற்சி 30 மணிநேரமும் என மொத்தம் 100 மணிநேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.3290 ஆகும்.
Advertisement
இப்பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆண், பெண் இருபுாலரும் சேரலாம். மேலும், இப்பயிற்சி குறித்த விவரங்களை அறிந்து கொள்ள பயிற்சி நிலையத்தையோ அல்லது 94860-45666 என்ற செல்லிடபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.