முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே மர்ம கும்பலால் கிறிஸ்துவ மத போதகர் வெட்டி படுகொலை

விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கிறிஸ்துவ மதபோதகரை, மற்றொரு வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதை தடுக்க வந்த மதபோதகரின் மனைவிக்கும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

Updated On : 6 செப்டம்பர், 2015 at 5:49 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:08 PM

விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கிறிஸ்துவ மதபோதகரை, மற்றொரு வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதை தடுக்க வந்த மதபோதகரின் மனைவிக்கும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ரூதர்(43). இவரது மனைவி ஜோசப்பின்(38). இவர்கள் இருவரும் எம்.புதுப்பட்டி, தாழிக்குளத்துப்பட்டியில் இயங்கி வரும் தேவலாயங்களுக்கு மதபோதகராக இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று எம்.புதுப்பட்டி தேவாலயத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு வழிபாடுகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.30 மணிக்கு விருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, நடையனேரி-விருதுநகர் சாலையில் சமத்துவபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு வந்த போது, எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் மார்ட்டின் ரூதரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதை தடுக்க வந்த அவரது மனைவிக்கும் அரிவாள்வெட்டு விழுந்தது. இதையடுத்து, பிடிக்க வந்த பொதுமக்களிடம் அரிவாள் காட்டி மிரட்டிவிட்டு மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடினர்.

Advertisement

சாலை மறியல்:

இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு மார்ட்டீன் ரூதரின் உறவினர்கள் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பாண்டியன் நகர் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனர். அதையடுத்து, சடல வைப்பறை முன்பு கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.