விருதுநகர் பகுதியில் சாரல் மழையை அடுத்து மானாவாரியில் விதைப்பு பணிகள் மும்முரம்
விருதுநகர் மாவட்ட பகுதியில் பரவலான சாரல் மழையைத் தொடர்ந்து மானாவாரி விளைநிலங்களில் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளை மேற்கொள்ளும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட பகுதியில் பரவலான சாரல் மழையைத் தொடர்ந்து மானாவாரி விளைநிலங்களில் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளை மேற்கொள்ளும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1.27 லட்சம் ஹெக்டேரில் பம்ப்செட் மற்றும் மானாவாரி விளைநிலங்களில் விவசாய பணிகள் நடந்து வருகிறது. விதைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக விளைநிலங்களை உழவு செய்து தயார் நிலையில் வைத்து மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த பட்டத்தில் தான் தானியப் பயிர்களான கம்பு, சோளம், தினை, குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்ட பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பருவமாகும். அதோடு, விவசாயிகள் எதிர்பார்க்கிற அளவுக்கு தானிய விளைச்சளும் கிடைக்கும். அதனால், மானாவாரி விளைநிலங்களில் ஆடிப்பட்ட விதைப்பு பணிகள் மேற்கொள்வதை விவசாயிகள் விரும்புகின்றனர்.
இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 4 மாதங்களாக 245 மி.மீட்டர் வரையில் மழை பெய்துள்ளது. இந்நிலையில் நிகழாண்டிற்கு மானாவாரி மற்றும் பம்ப்செட் விவசாயத்தில் நெல் பயிர் 31 ஆயிரம் ஹெக்டேரிலும், 52500 ஹெக்டேரில் மக்காச்சோளம், சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட தானியப் பயிர்களும், பயறு வகைகள் 12200 ஹேக்டேரிலும், எண்ணைய் வித்து பயிர்களும், 6400 ஹெக்டேரிலும், கரும்பு 2900 ஹேக்டேரிலும், பருத்தி 12900 ஹெக்டேரிலும் சாகுபடி செய்வதற்கு வேளாண்மை துறையால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பம்ப்செட் விவசாயத்தில் சூரியகாந்தி, கடலை, கரும்பு, எள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் 18 ஆயிரம் ஹெக்டேரிலும் பயிரிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Advertisement