முகப்பு
தமிழ்நாடு

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியீடு

சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 8 செப்டம்பர், 2015 at 9:26 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:09 PM

சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு அரசால் அங்கிகாரம் பெற்ற பல்நோக்கு சுகாதார பணியாளர் சான்று பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அங்கிகாரம் பெற்ற செவிலியர், ஆக்சிலரி நர்ஸ், ஹெல்த் விசிட்டர் பட்டய படிப்பு மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் சான்று பெற்று தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

Advertisement

இதற்கான வயது வரம்பு அனைத்து வகுப்பினருக்கும் 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு உத்தேச பதிவு மூப்பு நாளது தேதி வரையில் பதிவு செய்தவர்கள் தகுதியுடையோர் ஆவார்.

எனவே மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் உத்தேச பதிவு மூப்புடைய பதிவுதாரர்கள் அனைத்து கல்வி சான்றுகளுடன் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 11-ம் தேதிக்குள் வர வேண்டும். அங்கு தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.