முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 11-ம் தேதி அம்மா திட்ட முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருகிற 11-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் கிராமங்களில் நடைபெற இருக்கிறது.

Updated On : 9 செப்டம்பர், 2015 at 7:45 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:10 PM

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருகிற 11-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் கிராமங்களில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தலைநகரத்திற்கு அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காகவும், மனு அளிக்கவும் வந்து சிரமப்பட்டுகின்றனர்.  இதுபோன்றவைகளை தடுக்கவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்கள் தேர்வு செய்து அம்மா திட்ட முகாம் என்ற பொதுமக்களை தேடி வருவாய்த்திட்டம் நடத்தப்படுகிறது.

Advertisement

இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அனைத்தும் உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்து நலத்திட்ட உதவி  அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

எனவே மேற்குறிப்பிட்ட நாளில் வட்டார அளவில் நடைபெற இருக்கிற கிராமங்களின் விவரம். ஸ்ரீவில்லிபுத்தூர்-கான்சாபுரம், சிவகாசி-கோட்டைப்பட்டி, சாத்தூர்-ஊமத்தம்பட்டி, விருதுநகர்-துலுக்கப்பட்டி, அருப்புக்கோட்டை-பொம்மகோட்டை, காரியாபட்டி-அயன்ரெட்டியாபட்டி,  திருச்சுழி-நடுவப்பச்சேரியிலும் அம்மா திட்ட முகாம் நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.