விருதுநகர் மாவட்டத்தில் 263 இடங்களில் 274 சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீஸார் அனுமதி
விருதுநகர் மாவட்டத்தில் 263 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 274 சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு போலீஸார் அனுமதி அளித்ததை தொடர்ந்து அப்பணியில் இந்து முன்னணியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 17 - ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவிற்காக பல்வேறு பகுதிகளில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவதற்காக 5 அடி முதல் 15 அடி உயரம் வரையி்ல் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இதில் விருதுநகர் - 42, சிவகாசி - 53, அருப்புக்கோட்டை - 42, ராஜபாளையம் - 40, ஸ்ரீவில்லிபுத்தூர் - 48, சாத்தூர் - 47, திருச்சுழி - 3 என மொத்தம் 263 இடங்களில் 274 விநாயகர் சிலைகள் ஏற்கனவே காவல்துறை குறிப்பிட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.
Advertisement
இச்சிலைகளை காவல் துறையினர் குறிப்பிடும் நாள்களில் கண்மாய் மற்றும் நீர் நிலைகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.