தமிழ்நாடு

திருச்செந்தூரில் நாளை ஆவணித் திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆவணித்திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.

சுப்பிரமணி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வெள்ளி;க்கிழமை (செப். 11) ஆவணித்திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.

எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலையில் வெள்ளைச் சாத்தி வீதி உலாவும்,  பகலில் சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் சேர்ந்தார்.  தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான், சுவாமி அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி வீதி உலா வந்து திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் மேலக்கோவில் சேர்ந்தது. வியாழக்கிழமை ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு பகலில் பல்லக்கிலும், இரவு சுவாமி; தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை முதலே பக்தர்கள் திருச்செந்தூரில் குவியத்தொடங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

கேதார்நாத் யாத்திரைப் பாதையில் நிலச்சரிவு: மகாராஷ்டிர பக்தர் பலி

ரூ. 20 கோடியா? ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை: ஆமீர் கான்

பொங் அணையில் நீர் திறப்பால் இடிந்து விழுந்த 2 மாடிக் கட்டடம்! | Himachal Pradesh

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!

SCROLL FOR NEXT