முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 10 சவரன் நகை, வைரநகை திருட்டு

விருதுநகரில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On : 13 செப்டம்பர், 2015 at 4:53 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:12 PM

விருதுநகரில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் லட்சுமி காலனியைச் சேர்ந்தவர் நாகமணி(60). இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றிருந்தாராம். இந்நிலையில், நேற்று இரவு விருதுநகருக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீட்டின் கதவு பூடடு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து உள்ள சென்று பார்க்கையில் பீரோவும் கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டு 10 சவரன் நகை, ஒரு லட்சம் மதிப்பிலான வைரத்தோடு மற்றும் வெள்ளிப் பொருள்கள் ஆகியவைகளை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் நாகமணி புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, வீட்டில் ஆள்கள் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.