முகப்பு
தமிழ்நாடு

பூரண மதுவிலக்கு: த.மா.காவினர் மாணவிகளிடம் கையெழுத்து இயக்கம்

பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா சார்பில் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து பெறும் இயக்கம் இன்று நடைபெற்றது.

Updated On : 16 செப்டம்பர், 2015 at 7:50 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:14 PM

பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா சார்பில் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து பெறும் இயக்கம் இன்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கோடி பேரிடம் த.மா.கா சார்பில் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் விருதுநகர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.காந்திராஜன் தலைமையில்  ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில், அக்கட்சியைச் சேர்ந்த ஏ.சி.ஆர்.டி.மோகன், அமல்ராஜ், மகளிர் அணித் தலைவி சாந்தி ஆகியோர் ஆர்வத்துடன் பங்கேற்று மாணவிகளிடம் கையெழுத்துக்கள் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.