விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருக்கோயில்களில் பக்தர்கள் வழிபாடு
விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருக்கோயில்களில் பக்தர்கள் படையல் வைத்து இன்று(வியாழக்கிழமை) வழிபாடு செய்தனர். அதேபோல், இந்து முன்னணியினர் சார்பில் 327 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிற்ப்பு பூஜையும் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருக்கோயில்களில் பக்தர்கள் படையல் வைத்து இன்று(வியாழக்கிழமை) வழிபாடு செய்தனர். அதேபோல், இந்து முன்னணியினர் சார்பில் 327 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிற்ப்பு பூஜையும் செய்தனர்.
விருதுநகரில் தேசபந்து மைதானம், ரயில்வே பீடர் ரோடு, மேற்கு ரதவீதி, ரயி்லவே காலனி, கருப்பசாமி நகர், யானைக்குழாய் தெரு, கச்சேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் திருக்கோயில்களில் விநாயர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொங்கல் படையல்கள் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதையடுத்து, விநாயகருக்கு முன்பு வைக்கப்பட்ட படையல்களை பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாகவும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தந்த பகுதி திருக்கோயில் நிர்வாகத்தினரால் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதேபோல், இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க சார்பில் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் முன்புறம், தேசபந்து மைதானம், மேற்குத் தெரு, டி.டி.கே சாலை, மேற்குத் தெரு, அல்லம்பட்டி, பாண்டியன் நகர், முத்துராமன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 அடி முதல் 12 அடி வரையில் பல்வேறு ரகங்களில் 62 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜையும் நடைபெற்றது. அதையடுத்து அவ்வழியாக செல்வோருக்கு இனிப்பு பொங்கல் மற்றும் படையல் பிரசாதமாக வழங்கினார்கள். இதேபோல், சிவகாசி நகரம் மற்றும் ஒன்றிய பகுதியில் 73 சிலைகளும், அருப்புக்கோட்டையில் 41 சிலைகளும், ராஜபாளையத்தில் 43 சிலைகளும், சாத்தூரில் 46 சிலைகளும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 56 சிலைகளும், திருச்சுழியில் 6 என மொத்தம் 327 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.
Advertisement
இம்மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சிலைக்கும் அந்தந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த தலா 2 போலீஸார் பேர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இச்சிலைகள் அனைத்தும் 17-ம் தேதி முதல், வருகிற 21-ம் தேதிக்குள் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள நீர் நிலைகளில் கரைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.