முகப்பு
தமிழ்நாடு

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் தாயை கொலை செய்த மகன் கைது

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் தாயை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:46 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் தாயை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிவிளையைச் சேர்ந்தவர் ஜேசுமிக்கேல் மனைவி பிரான்சிஸ்மேரி (60). இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார்.இவருக்கு 4 பெண் , இரண்டு ஆண் உள்ளது. அதில் ஆண்  ஒருவரை தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இதில் மூத்த மகன் தங்கத்துரை (35) அதே ஊரில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் இருந்து  வந்தார். அதில் பிடிக்காமல் தாயாரின் வீட்டின் அருகில் குடிசை வீடு அமைத்தாராம். பின்னர் தாயாரிடம் சொத்து  பிரித்து தருமாறு கேட்டாராம். அவர் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதில் ஏற்பட்ட பிரச்னையில் தங்கத்துரை,  தாயாரை திங்கள்கிழமை காலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க வந்த அவரது சகோதரி ஜான்சிராணி, ஜான்சிராணி மகள் ஆரோக்கிய ஜெனிபர் ஆகியோரையும் வெட்டினார்.

இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடன் நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ராபின்சன் விசாரணை நடத்தி தங்கதுரையை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments