முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 24-ம் தேதி மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற செப்.24-ம் தேதி 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து உரையாட இருக்கிறார்.

Updated On : 22 செப்டம்பர், 2015 at 8:25 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:17 PM

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற செப்.24-ம் தேதி 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து உரையாட இருக்கிறார்.

இது குறித்து தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று(செவ்வாய்கிழமை)  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார். இம்மாவட்டத்திற்கு வருகிற 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Advertisement

அதன் அடிப்படையில் வருகிற 23-ம் தேதி இரவு ராஜபாளையத்திற்கு வருகிறார். அதையடுத்து மறுநாள்(24ம் தேதி) காலை 8 மணிக்கு வனவிலங்குகள் மீட்பு மையத்தில் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். அதையடுத்து ராஜபாளையம் சந்தைக்கு சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளையும் சந்திக்கிறார். ராஜபாளையம் அருகே அரசு மருத்துவமனை எதிரே நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார்.

பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கிழக்கு ரத வீதியில் உள்ள உணவு விடுதியில் தேநீர் அருந்திவிட்டு, அப்பகுதி பொதுமக்களிடம் உரையாடுகிறார். அதைத் தொடர்ந்து அருணாச்சல வள்ளியம்மாள் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுடன்  கலந்துரையாடல் செய்கிறார். பின் நெசவாளர் குடியிருப்புகளுக்கு சென்று அவர்களை சந்தித்து பேசுகிறார்.

அதையடுத்து சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து பேசும் மு.க.ஸ்டாலின், பல்வேறு இடங்களில் பொதுமக்களையும் சந்தித்து பேசிவிட்டு, சாத்தூர் அருகே மிளகாய் வத்தல் அரங்கத்தில் தீப்பெட்டி, பட்டாசு, பேனா நிப்பு, அரிசி மில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் செய்து, மதிய உணவும் அருந்துகிறார். மாலையில் விருதுநகர் நுழைவு பகுதியில் நடைபயணமாக பஜார் வழியாக வந்து தேசபந்து மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். அதையடுத்து, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து பேசவும் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.