தமிழ்நாடு

விஜயகாந்த் கோபப்படாத நிலையில் வைகோ ஏன் கோபப்படுகிறார்? பழ.கருப்பையா கேள்வி

தினமணி

தேமுகவினரின் நிலைகள் குறித்து விஜயகாந்த் கோபப்படாத நிலையில், வைகோ ஏன் கோபப்பட வேண்டும் என்று பழ.கருப்பையா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தமிழ்தொலைக்காட்சி ஒன்றிடம் பழ.கருப்பையா பேசியதாவது:

தேமுதிகவிலிருந்து சில எம்எல்ஏக்களும், மாவட்டச் செயலாளர்களும் வெளியே வந்துவிட்டார்கள் என்றவுடன் பதற்றப்படுவது விஜயகாந்த் இல்லை அவருடைய கூட்டணியை சேர்ந்த மற்ற தலைவர்கள்தான் பெருமளவிற்கு பதறுகிறார்கள். நான் கேட்கிறேன் எதற்கு வைகோ இவ்வளவு ஆவேசப்படுகிறார்.

ஒவ்வொரு எம்எல்ஏக்குளும், மாவட்ட செயலாளர்களும் 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு அவர்கள் வெளியே வந்து திமுகவுக்கு ஆதரவாக அந்த கட்சியை பிளப்பதற்கு சதி செய்கிறார்கள் என்பது அரசியலில் நாகரிகமாக இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும். இதற்கு முன் அதிமுகவிற்கு தேமுதிக எம்எல்ஏக்கள் சென்ற போது இது போன்ற குற்றச்சாட்டை வைகோ போன்றவர்கள் ஏன் கூறவில்லை என்றும், கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT