தமிழ்நாடு

ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்: அப்பல்லோ புதிய அறிக்கை

DIN

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை இன்று புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

புதிய அறிக்கையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமானது.
 
ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவியின் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 78 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோகிராம் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT