நேற்று அயனாவரத்தில் தேயிலை மொத்த வர்த்தக நிறுவனம் ஒன்றிலிருந்து 2.3 டன் அளவிலான தரக்குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உணவுப் பாதுகாப்புக்கு கழக நியமன அதிகாரி ஆர்.கதிரவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்புக் கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட இந்த தரம் குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் 'கிங் இன்ஸ்டிடியூட்டின்' ஆய்வு முடிவுகள் வெளிவந்ததும் காலாவதியான டீத்தூள் பாக்கெட்டுகளை விற்பனை செய்த டீக்கடைகள் மற்றும் தேயிலை மொத்த வர்த்தக நிலையங்களின் தேயிலை விற்பனை உரிமங்களை தேயிலை வாரியம் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிறம், மணம், திடம்
டீத்தூளை பொறுத்தவரை 'நிறம், மணம், திடம்' இந்த மூன்றும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்கள், எந்தக் கலப்படமும் இல்லாத டீத்தூளில் 'மணமும், திடமும்' ஓரளவுக்கு கிடைக்கக் கூடும், ஆனால் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் தயாரிக்கப்படும் தரக்குறைவான டீத்தூளில் நிறத்துக்காக பெரும்பாலும் 'பிஸ்மார்க் பிரவுன்,பொட்டாசியம் ப்ளூ, செயற்கை மஞ்சள் தூள், இண்டிகோ' போன்ற உணவுப் பாதுகாப்பு கழகத்தால் அங்கீகரிக்கப் படாத வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த வேதிப்பொருட்கள் 'கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில்' அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ந்து இந்த தரம் குறைந்த டீத்தூளில் தயாரான டீ அருந்துபவர்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் வரலாம். எனவே தேநீர் பிரியர்கள் தாங்கள் அருந்தும் தேநீர் தரமானது தானா என்பதில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.