தமிழ்நாடு

வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டிபி.ராஜேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

ஏ. அருள்ராஜ்

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டிபி.ராஜேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இயங்க உள்ள வாக்குச்சாவடி மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களின் வசதிக்கேற்ப சாய்தளம், மின்சாரம், குடிநீர், சுற்றுப்புற பாதுகாப்பு போன்றவை குறித்து பார்வையிட்டு அவர் கூறுகையில்,

கரூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற 2016 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் நகராட்சி பகுதிகளில் சாமியானா மூலம் பந்தல் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி பாதுகாப்பு பணிகளும் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து பொது சுகாதாரத்துறையின் மூலம் நடமாடும் மருத்துவக்குழுவும் செயல்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று போதிய அளவு குடிநீர் உள்ளதா, மின்சாரம் சீராக இயங்கி வருகிறதா என உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு.அருணா, அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி தேர்தல் அலுவலர் லீலாவதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT