முகப்பு
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் திமுக, அதிமுக.,வினர் இடையே மோதல்: வாக்குப்பதிவு பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விருவிருப்பாக தொடங்கின. ஆரம்பம் முதலே வாக்குப்பதிவு விருவிருப்பாக நடைபெற்று வருகின்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விருவிருப்பாக தொடங்கின. ஆரம்பம் முதலே வாக்குப்பதிவு விருவிருப்பாக நடைபெற்று வருகின்றது.

மொத்தம் 8 சட்டபசை தொகுதியில் 19 லட்சத்து 3 ஆயிரம் வாக்களர்கள் உள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி மாவட்டம் முமுவதும் 15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 11 மணி நிலவரப்படி திருவண்ணாமலை தொகுதியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றது. இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இடங்களில் மோதல்

திருவண்ணாமலை அடுத்து சேர்பாபட்டு கிராமத்தில் அதிமுக, திமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதிமுக

பிரமுகர் ஒருவரை திமுக பிரமுகரை கத்தியால் வெட்டினர். இதையடுத்து டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமாதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதே போல திருவண்ணாமலை நகரில் அமராவதி முருகைய்யன் நகராட்சி பள்ளியில் அதிமுக.,வினரை, திமுக.,வினர் தாக்கினர். இதே போல தாமரை நகர் அரசு பள்ளியிலும் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த ஏழு தொகுதிகளிலும் மாவட்ட கண்காணிப்பாளர் இரா. பொன்னி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசியல் கட்சியினரை பள்ளியில் இருந்து வெளியேற்றி வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற ஏற்பாடு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.