10ம் வகுப்பு பொதுத் தேர்வு: புதுச்சேரியில் 8 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி
புதுச்சேரி: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகளில் புதுவை மாநிலத்தில் 8 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுச்சேரி: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகளில் புதுவை மாநிலத்தில் 8 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகின. இதில் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி, கதிர்காமம், அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி, வாதானூர், சவரிராயலு நாயகர் அரசு உயர்நிலைப்பள்ளி, புதுச்சேரி, பண்டிட் துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளி, பெத்துசெட்டிப்பேட், இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளி, காட்டேரிக்குப்பம், டிகேஆர் அரசு உயர்நிலைப் பள்ளி, தேங்காய்த்திட்டு, டி.சைமன் கார்டினல் அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியார் நகர், பளளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி, 98.96 சதவீதம், அரசு உயர்நிலைப் பள்ளி சோரப்பட்டு 98.36 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளளன.