முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி வழங்கக் கோரி பணியாளர்கள் முற்றுகை

கூட்டுறவு வங்கிகளுக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணியாளர்கள் திங்கள்கிழமை திருநெல்வேலியில் மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:42 PM
பகிர்:


திருநெல்வேலி: கூட்டுறவு வங்கிகளுக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணியாளர்கள் திங்கள்கிழமை திருநெல்வேலியில் மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிளில் பணப் பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், விவசாயிகள் தங்களது கணக்கில் வரவு செலவு செய்ய முடியவில்லை.

விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் விற்க முடியாத சூழல் நிலவுகிறது. நகைக்கடனுக்கு பணம் செலுத்தவும், நகையினை மீட்க முடியாத சூழலில் உறுப்பினர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நகைக்கடன் வழங்க முடியாத சூழலில் கிராமங்களில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பணப் பரிவர்த்தனை முடங்கின. ஆகவே கூட்டுறவு வங்கிகளுக்கு தேவையான நிதியினை வழங்கும் வரை திங்கள்கிழமை முதல் வங்கிகள் இயங்காது என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 160 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும் மூடப்பட்டன. வங்கிப் பணியாளர்கள் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் இயங்கி வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு திரண்டு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு அமைப்பின் மாநில பொதுச்செயலர் கே. முத்துபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம். சுப்பிரமணியன், பொருளாளர் எல். பால்ராஜ், துணைத் தலைவர்கள் செல்லத்துரை, காளிதாசன் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →