தமிழ்நாடு

ரூபாய் நோட்டு விவகாரம்: நாளை காங்கிரஸ் 'தனி ஆவர்த்தன' போராட்டம்!

பழைய 1000 மற்றும் 500 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் முடிவைக் கண்டித்து  நாளை காங்கிரஸ் தனியாக போராட்டம் நடத்துகிறது.

DIN

சென்னை: பழைய 1000 மற்றும் 500 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் முடிவைக் கண்டித்து  நாளை காங்கிரஸ் தனியாக போராட்டம் நடத்துகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நாளை (திங்கள்) காலை 10.30 மணி அளவில் அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் அருகில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரா.மனோகர், ரங்கபாஷ்யம், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், எம்.பி., எல்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்க உள்ளனர் . எனவே காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதே விவகாரத்திற்கு தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் நாழி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது காங்கிரஸ் தனியாக போராட்டம் நடத்தும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT