முகப்பு
தமிழ்நாடு

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 5 பேரை  இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

Updated On : 4 அக்டோபர், 2016 at 4:08 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 5 பேரை  இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 220 விசைப்படகுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அதில், நெடுந்தீவு அருகே ஒரு படகில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த எம். தங்கமணி(50), எஸ். பிரதீப்(23), எஸ். அருண்(21), பி.சண்முகவேல்(35) மற்றும் கே. கோபு(35) ஆகியோரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்ததோடு, அவர்களது படகையும் சிறை பிடித்துள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.