தமிழ்நாடு

அரவக்குறிச்சி அருகே கார் விபத்து: கர்நாடகாவைச் சேர்ந்த வியாபாரிகள் 2 பேர் பலி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு துக்கம் விசாரிக்க வந்த கடலை மிட்டாய் வியாபாரிகள் 2 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஏ. அருள்ராஜ்

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு துக்கம் விசாரிக்க வந்த கடலை மிட்டாய் வியாபாரிகள் 2 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கடலை மிட்டாய் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 4 பேர், தூத்துக்குடிக்கு துக்கம் விசாரிக்க காரில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களது கார் இன்று அதிகாலை 6.30 மணியளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததில் கடலை மிட்டாய் வியாபாரிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்தில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT