தமிழ்நாடு

சிலைக்கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு: முதல்வர் நாராயணசாமி

சுஜித்குமார்


புதுச்சேரி: சிலைக்கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு போதும் சிலை கடத்தல் கும்பல்-பதுக்கும் கும்பலை புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக பகுதியில் மிகப் பழமையான கோவில்களில் சிலைகளை திருடி விற்றதாக சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதே போல் சிலைகளை திருடி தீனதயாளனுக்கு விற்றதாக புஷ்பராஜன் என்பவரை கைது செய்து விசாரித்த போது, திருடப்பட்ட சிலைகளை புதுச்சேரி கோலாஸ்நகரில் உள்ள ஆர்ட் கேலரியில் மறைத்து வைத்து இருப்பதாக தெரிவித்த தகவலின் பேரில் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார்
புதுச்சேரி வந்து ரூ. 50 கோடி மதிப்புள்ள 11 சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
சிலை கடத்தல் மற்றும் சிலை பதுக்கும் கும்பலை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம்.  இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துபேசி குற்றப்பிரிவு போலீசார் மூலம் சிலை கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT