தமிழ்நாடு

3 தொகுதிகள் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்

மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகள் தேர்தல் தேதி அக்டோபரில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும்,

DIN

மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகள் தேர்தல் தேதி அக்டோபரில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகே இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது அதிகளவு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவேல் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதன்படி, 3 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியது:-
பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நடத்த ஆறு மாதங்கள் அவகாசம் இருக்கின்றன. அதன்படி, தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், அதனுடன் சட்டப் பேரவைத் தேர்தலை இணைந்து நடத்த வாய்ப்புகள் குறைவு. எனவே, தேர்தலுக்குப் பிறகே சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும். அக்டோபரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நவம்பரில் வாக்குப் பதிவுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை தாக்கும்... சாந்தினி!

நம்ம ஊரு சிங்காரி - சசிகலா

வெள்ளி சலங்கைகள் - வைஷ்ணவி ராவ்

இசைநிறை அளபெடை... ஷ்ரத்தா தாஸ்!

மோசமான விமர்சனங்களைப் பெறும் ஃபஹத் ஃபாசில் படம்!

SCROLL FOR NEXT