தமிழ்நாடு

தலித்துகள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

தலித்துகள் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறைத் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

தலித்துகள் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறைத் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம், அரசனூர் கிராமத்தில் வசிக்கும் தலித்துகள் மீது மற்றொரு சமூகப் பிரிவினர் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பலர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கர்ப்பிணி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கிராமத்தில் தலித்துகள் விமரிசையாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடியதை பொறுத்துக் கொள்ள முடியாதாமல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தும், இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இது கண்டனத்துக்குரியது.
தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும். வீடுகள், பொருள்களை இழந்து தவிப்போருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!

பார்வை தாக்கும்... சாந்தினி!

நம்ம ஊரு சிங்காரி - சசிகலா

வெள்ளி சலங்கைகள் - வைஷ்ணவி ராவ்

இசைநிறை அளபெடை... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT